பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட பொருளாளர்சங்கைஇல சரவணன், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், பெரியதுரை ,வெள்ளத்துரை, பால்ராஜ், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன்,
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராயல் கார்த்தி, ராஜராஜன், அன்சாரி, வார்டு செயலாளர் வாழைக்காய் துரைப்பாண்டியன், மகளிர் அணி சுப்புத்தாய், அண்ணாமலை , மாணவர் அணி வீரமணி மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்