கமுதி, அக்,29
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
62-வது குருபூஜை விழா மற்றும் 117-வது ஜெயந்தி விழா வரும் 30-ம் தேதி
பசும்பொன் கிராமத்தில்
நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மழையினால் சேதமடைந்த மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில், மணல் மூட்டை கொண்டு நடைபெறும் தற்காலிக மறு சீரமைப்பு பணிகளையும், கிலோமீட்டர் கற்கள், பர்லாங் கற்கள், கைபிடிச் சுவர் போன்ற சாலை பாதுகாப்பு உபகரணங்களுக்கு வர்ணம் பூசுவதையும் ஆய்வு செய்தார்.
சாலை ஓரங்களில் உள்ள அறிவிப்பு பலகைகள் சாலையில் பயணிப் பவர்களின் பார்வையில் படும் அளவிற்கு மறைக்கப் பட்ட மரக்கிளைகளை அகற்றும்படி அறிவுறுத்தினார்.முதுகுளத்தூர் பகுதியில் நடைபெறும் பாலப்பணிகளின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.
உத்திரகோசமங்கை சாலையில் மழையினால் அரிக்கப்பட்டு சாலை மேற்பரப்பில் படிந்துள்ள மண்ணை அகற்றி விபத்துல்லா போக்குவரத்தை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
மழையினால் சேதமடைந்த சாலையை உடனடியாக பேட்ச் ஒர்க் செய்யவும் ராமநாதபுரம் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை தற்காலியை சீரமைப்பு பணி மூலம் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.மேலும் மேலூர் சாலையில் நடைபெறும் நான்கு வழிச்சாலையை ஆய்வு செய்தார்.மேலும் காவனூர் பகுதியில் பாலத்தின் நான்கு புறமும் மணல் மூடை அடக்கி மண்ணரிப்பை தடுக்கும் விதத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கோட்ட பொறியாளர் முருகன் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.