கொடைரோடு பிப் .13
திண்டுக்கல் மாவட்டம்
கொடை ரோடுஅருகில் சுங்கச் சாவடி செயல்பட்டு வருகிறது திண்டுக்கல் மதுரை சென்னை பெங்களூர் தூத்துக்குடி ஆகியமுக்கிய சாலையாக உள்ளது அந்த வழியாக செல்லும் போது சுங்கச் சாவடியில் நேரடியாக பணம் செலுத்தும் முறை அல்லது ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது ஆனால் மதுரையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து கொடைரோடு சுங்கச் சாவடிகள் கடக்கும்போது கதவு திறக்கப்படவில்லை அந்த அரசு பேருந்தில் பணம்செலுத்தும் முறை காலாவதி ஆகிவிட்டது சுங்க சாவடியில் வேலை செய்யும் ஊழியர்கள் பணம் இல்லாத காரணத்தினால் கதவு திறக்கப்படவில்லை பணம் செலுத்தினால் கதவு திறக்கப்படும் என்று அறிவுறுத்தினர் அரை மணிநேரம் கடந்தும் முடிவுக்கு வரவில்லை பயணிகள் ஆத்திரமடைந்து சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதன்பிறகு நடத்துனர் அதிகாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தப்பட்டது அதன் பிறகு சுங்கச்சாவடி கதவு திறக்கப்பட்டதுஅப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பாய் காணப்பட்டது