தஞ்சாவூர். அக்.14.
திருச்சி -தாம்பரம் இடையே தொடங்கப்பட்ட புதிய ரெயிலுக்கு தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி தலைமையில் பயணி கள் வரவேற்பு அளித்தனர்.
தஞ்சாவூர் – சென்னை இடையில் பகல் நேர ரெயில் இயக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் எஸ் எஸ் பழநி மாணிக்கம், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி,காவிரி டெல்டா ரயில்வே உபயோகிப்பாளர் சங்கம், தஞ்சாவூர் – திருச்சி ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கம், தஞ்சாவூர் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை, மாவட்ட ஓய்வூதியர் சங்கம் உட்பட பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கையை நிறைவேற் றும் விதமாக திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்துக்கு இரு வழிதடத்திலும் புதிய விரைவு ரெயிலை ரயில்வே நிர்வாகம் தொடங்கியது.
திருச்சியில் இருந்து வெள்ளிக்கி ழமை காலை 5:35மணிக்கு புறப்பட்ட இந்த ரெயில் காலை 6 25 மணிக்கு தஞ்சாவூருக்கு வந்தது அப்போது மக்களவை உறுப்பினர் முரசொலி தலைமையில் பயணி கள் வரவேற்பு அளித்தனர் .மேலும் ரெயிலை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு முரசொலி பொன்னாடை அணிவி த்து இனிப்பு வழங்கினார். தொடர்ந்து பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதையடுத்து ரெயிலை மக்களவை உறுப்பினர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் முரசொலி எம்பி தெரிவித்ததாவது. இந்த ரெயில் சேவை வாரத்தில் திங்கள், வியாழன் தவிர மற்ற 5 நாட்களும் இயங்கும், தொடர்ந்து 3 மாதங்களுக்கு சோதனை ஓட்டமாக இயக்கப்படும். இந்த ரெயிலை நிரந்தரமாக இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய ரெயிலால் அனைத்து தரப்பினரும் பயனடைவார் என்றார்.
நிகழ்ச்சியில் காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலர் வழக்கறிஞர் ஜீவக்குமார், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர் திருமேனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.