ஈரோடு ஜூன் 17
கோபி ஒத்தக்குதிரையில் வெங்கடேஸ்வரா சர்வதேச மேல்நிலைப்பள்ளி (சிபிஎஸ்இ) உள்ளது இந்த பள்ளியின் மாணவி கீர்த்தனா ஸ்ரீ மே மாதம் நடைபெற்ற IIT-JEE ADVANCED தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளியின் தாளாளர் கே சி கருப்பணன் கேடயம் வழங்கி பாராட்டினார். இதில் நிர்வாக இயக்குனர்கள் செங்கோட்டையன் ஜோதிலிங்கம் மோகன் குமார் பள்ளியின் ஆலோசகர் பிரேமலதா, பள்ளி முதல்வர் டெபோரா அண் பெர்னான்டோ, துணை முதல்வர் திவ்யா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.