தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 35 ஆண்டுகள் முடிந்து 36 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் கட்சி கொடியேற்றி சிறப்பாக கொண்டாட வேண்டும் என மருத்துவர் அய்யா ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிவுறுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் பா.ம.க கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட டாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அச்சன்புதூர் ,நெடுவயல் ,பகவதிபுரம் ,உள்ளீட்ட கிராம பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றப்பட்டது அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் ஓட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் சீதாராமன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் அய்யம்பெருமாள் பிள்ளை, மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அச்சன்புதூர் பேருர் செயலாளர் பக்கீர் முகம்மது, செங்கோட்டை மேற்கு ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, பேரூர் தலைவர் அப்துல் மஜித் –
தென்காசி ஒன்றிய தலைவர் தண்டபானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.