தென்காசி அஸ்ட்ரோ கிளப் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் இணைந்து விண்வெளி வாரத்தை முன்னிட்டு நடத்திய விண்வெளி அறிவியல் திருவிழா சங்கரன்கோவில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் மாவட்டச் செயலாளர் சாதனா வித்யாலயா பள்ளியின் தாளாளருமான சாதனா ரமேஷ் அனைவரையும் வரவேற்றார். வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ஆனந்தன் ஐய்யாசாமி அவர்கள் தலைமையுரையுடன் விழா தொடங்கியது. தினமலர் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கேரள மாநில சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பிளானிடோரியம் டைரக்டர் அருள் ஜெரால்ட் பிரகாஷ் கலந்து கொண்டு விண்வெளி அறிவியல் பற்றி எடுத்து கூறினார்.
மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ் எம் குமார் கல்வியாளர் லெனின் ஆகியோர் இரவில் வானியல் பற்றியும் கோள்கள் இயக்கம் பற்றியும் எடுத்துக்கூறி வானில் சனி, நிலா, வியாழன் கோள்களில் நான்கு நிலாக்களையும் தொலைநோக்கி உதவியுடன் மாணவர்களுக்கு காண்பித்தனர். தென்காசி அஸ்ட்ரோ கிளப் செயல்பாட்டாளர் அருள் விண்ணரசு பாடல்கள் மூலம் விண்வெளி அறிவியலை பாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி அவர்கள் மாணவர்களுக்கு பெரிஸ்கோப் செய்து காண்பித்தார். கடையநல்லூர் சாதனா வித்யாலயா சார்பாக விண்வெளி புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது . அதிகாலையில் உயிர் நடையுடன் பறவைகள் கண்டுணர்வதுடன் ஆய்வுக்காக வழி காட்டப்பட்டது. வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் ட்ரோன் எவ்வாறு இயக்குவது, 3டி பிரிண்டிங் செயல்பாடு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
இம் முகாமில் 50 பள்ளிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் மேலும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக வாய்ஸ் ஆப் தென்காசி ஃபவுண்டேஷன் காருண்யா குணவதி நன்றி கூறினார் .