மதுரை. தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையத்தை
போக்குவரத்து துணை ஆணையர் வனிதா முன்னிலையில்
மதுரை மாநகர் காவல் ஆணையர். முனைவர். J. லோகநாதன்,
திறந்து வைத்தார்.
அதன் பின்னர்
ஆணையர் மேற்பார்வையில் அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிங்களுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி முறையாக போக்குவரத்து விதிகளை பின்பற்றி வருபவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்,
இந்த நிகழ்வின் போது மாநகர
போக்குவரத்து உதவி ஆணையர்கள், இளமாறன்,
செல்வின்,
ஆகியோர் உட்பட திலகர் திடல்
போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி
மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பொது மக்கள் பலர் உடனிருந்தனர்.