பரமக்குடி,மே.31:
அரசு கலை கல்லூரிகளில் 2024 -25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நேற்று தொடங்கியது.இதனைத்தொடர்ந்து, ஜூன் 10ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கு அரசு இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து அறிவியல் (பிஎஸ்சி) பட்டப் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையும், ஜூன் 11 தேதி வணிகவியல், தொழில் நிர்வாகவியல் படிப்புகளுக்கும்,12ஆம் தேதி
வரலாறு பொருளியல் துறைகளுக்கும், 13 ஆம் தேதி தமிழ்,ஆங்கிலம் மொழிப் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து முதல்வர் மேகலா வெளியிட்டுள்ள தகவலில்” 2024-25ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை ஜுன்.10 முதல் ஜூன்13 வரை காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இந்த கல்லூரியில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள், ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் உரிய அசல் சான்றிதழ்கள் இரண்டு நகல்கள், ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.மேலும் மாணவர்களுக்கு கைபேசி மற்றும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைக்காதவர்கள் நேரடியாக கல்லூரியை தொடர்புகொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
படவிளக்கம்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கியது.