போட்டியில் 750 மாணவ மாணவியர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர். டிச.3.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கலை ஆயம் ஆகியன இணைந்து நடத்திய இளந்தளிர் 2024 விருதுகள் நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவ
ட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை ஏற்று விருது வழங்கினார்.
பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் குமார்,சுற்றுலா அலுவலர் சங்கர், கலை ஆயம் உறுப்பினர்கள் பொறியாளர் கார்த்திகேயன், சுப்பிரமணியம்,அண்ணாமலை,
பிரகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலம் முழுவதிலிருந்து 750 மாணவ மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.
திருச்சி கலைவிருக்ஷா ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி, ஜூனியர் கிளாசிகல் குரல் பிரிவு ஏ. இருதயன்,தஞ்சாவூர் வேலம்மாள் போதி வளாகம், மூத்த பாரம்பரிய குரல் பிரிவு ஜி.ஆர்.வி. விஜய் முகேஷ்,சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா பள்ளி பரதநாட்டியம் ஜூனியர் பிரிவு மீரா ஸ்ரீராம்,வாலாஜாபேட்டை அந்தராலயம் கலைநிகழ்ச்சி மையம், பரதநாட்டியம் ஜூனியர் பிரிவு பி.ஜெய்சாய்,சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா பள்ளி பரதநாட்டியம் சீனியர் பிரிவ சர்வ ஸ்ரீவி. மதன்,சென்னை மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி, பரதநாட்டியம் சீனியர் பிரிவு கே.பி. அதிதி,சென்னை ஸ்ரீதேவி நிருத்யாலயா, இளநிலை பரத நாட்டிய குழு ஆராத்யா நந்தகோபால்,தஞ்சாவூர் மனோஜி பட்டி சன்ரைஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நாட்டுப்புற பாடல் ஜூனியர் பிரிவு எஸ். அஸ்வதி உள்ளிட்ட 42 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கலை ஆயம் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் எஸ்.முத்துக்குமார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார்.