பரமக்குடி,டிச.24:
பரமக்குடி அருகே எஸ்.அண்டக்குடி ஊராட்சியை சேர்ந்த மூன்று ஊர்களை பரமக்குடி நகராட்சியுடன் இணைப்பதற்கு இணைப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேந்தோணி உரப்புலி தெளிச்சத்த நல்லூர் அண்டக்குடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகள் நகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எஸ் அண்டக்குடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பாம்புவிழுந்தான், ராஜீவ் நகர், பர்மா காலனி, ஆகிய மூன்று ஊர்களை பரமக்குடி நகராட்சியுடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும். அதேபோல் இப்பகுதியில் 162 ஏக்கர் பரப்பளவில் நெல், மிளகாய், பருத்தி ஆகிய பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் விவசாய பகுதிகள் ரியல் எஸ்டேட் நிலமாக மாறி விவசாயம் பாதிக்கப்படும். மேலும், இப்பகுதிகளை நகராட்சியுடன் இணைப்பதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே பரமக்குடி நகராட்சியுடன் எஸ்.அண்டக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட அட்டையுடன் அலுவலக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை எடுத்து கலைந்து சென்றனர்.
பட விளக்கம்
நகராட்சியுடன் எஸ் அண்டக்குடி கிராம ஊராட்சி பகுதிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர் –