தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலமுறை ஓய்வூதியம் பெற்றுவரும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்திட அரசாணை வெளியிட வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு மாவட்ட தலைவர் கற்குவேல், லட்சுமி மாவட்ட மகளிரணி செயலாளர், தலைமையில்அ.கருப்பசாமி மாவட்ட செயலாளர்,த.சங்கரலிங்கம் மாவட்ட பொருளாளர்,மா.ராஜா முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பெ.வேல்முருகன் மாநில பொது செயலாளர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார், ஒன்றிய தலைவர்கள் ஓட்டபிடாரம் இசக்கிமுத்து, விளாத்திகுளம் கிருபா பெஞ்சமின், புதூர் வேல்முருகன் கோவில் பட்டி சிவபாலன், கயத்தாறு க.ராகேஸ்வரன், கருங்குளம் சோமு, ஆழ்வார் திருநகரிப.வெள்ளத்துரை, திருவைகுண்டம் வேலாயுதம், சாத்தான்குளம் ஜார்ஜ் சிங்கதுரை, உடன்குடி.ரா.அருள் , இறுதியாக முன்னாள் மாவட்ட செயலாளர் கசாலி மானக்காலர் நன்றியுரை வழங்கினார், அந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பஞ்சாயத்து அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி செயலாளர்கள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம்

Leave a comment