ஸ்ரீ பெரும்புதூர் ஏப்ரல் 10
காஞ்சிபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதூர் வட்டம் கொளத்தூர் ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவராக வெள்ளாரை அரிகிருஷ்ணன் மக்கள் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் பாஸ்கர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 24,/25 சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வரும் 16 ஆம் தேதி காலை 11 மணிக்கு உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்தில் ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆஜராக வேண்டும் என அழைப்பானை அனுப்பியது ஏற்புடையதல்ல எனக்கூறி, பொறுப்புத் தலைவர் அரிகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அழைப்பாணையை திரும்ப பெற கோரி மனு அளித்தனர்.
கொளத்தூர் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறக் கூடாது என உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற புகார் அளித்துள்ளதாகவும், காழ் புணர்ச்சி காரணமாக இவ்வாறு புகார் அளித்துள்ளதாகவும், ஊராட்சி தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.