கிருஷ்ணகிரி,ஜன.7- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் பதவிக்காலம் ஜனவரி 5 ஆம் தேதி நிறைவடைந்தது. இதையொட்டி பல்வேறு அரசியல் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசு துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் ஐந்தாண்டு காலத்தில் சிறப்பாக பணியாற்றி மக்களுக்கு சேவை செய்தமைக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர். இதைத்தொடர்ந்து சிறந்த ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் அகில இந்திய தேசிய தலைவரும் மாநில தலைவருமான டாக்டர் இரா.கவியரசு தலைமையில் காமராஜர் விருது வழங்கப்பட்டது. சிறப்பாக 5 ஆண்டு காலத்தில் கிராம சபா கூட்டத்தை கூட்டி செயல் படுத்தினார். அதற்கான சிறந்த பஞ்சாயத்துக்கான தேசிய புரஸ்கார் விருது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் விருதை வழங்கி ரூ.10,00000 பத்து லட்சம் வழங்கப்பட்டது. அதற்கான விருதை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு அவர்கள் எஸ்.ஆர். ரங்கநாதனுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வாங்கி வழங்கி பாராட்டினார் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் துரைராஜி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பழனி,
மல்லாகவுண்டன்,
சுகுமார்,பிரசாந்தி
விஜயலட்சுமி,
கலைவாணி,துர்கா, சம்பத்குமார்,பெருமாள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை
மாநில நல்லாசிரியர் விருது பெற்ற புளியம்பட்டி கணித ஆசிரியர் குமார் செய்துயிருந்தார். இதைத் தொடர்ந்து சுண்டகாப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைவாணி தலைமையில் ஆசிரியர்கள் ராமநாதன், சுதாகர், புஷ்பவள்ளி, கல்பனா, கலைச்செல்வி, சூர்யா ஆகியோர் பணி நிறைவு பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் எஸ் ஆர் ரங்கநாதனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.