மதுரை மே 30,
மதுரை திருப்பரங்குன்றத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ரூ. 18 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இக்கோயிலில் 2024 ஜூலை 1 முதல் 2025 ஜூன் 30 வரையான சில்லரை குத்தகை உரிம பொது ஏலத்தில் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கோவிலில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை ரூ. 18 லட்சத்து 18 ஆயிரத்துக்கும், முடி சேகரிக்கும் உரிமம் ரூ. 4.25 லட்சம், உயிர் பிராணிகளை சேகரிக்கும் உரிமம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 500, சரவணப் பொய்கையில் பரிகாரம், பால்குடம், காவடி செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலுக்கு ரூ. 95 ஆயிரம். எனவும் மலை மேல் காசிவிஸ்வநாதர் கோயிலில் கடைக்கு
உரிமம் ரூ. 3 லட்சத்து 2 ஆயிரத்து 500, மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தேங்காய்பழம், பூஜைப்பொருள் விற்பனை உரிமம் ரூ. 1 லட்சத்து77 ஆயிரம், மலைக்குப்பின்புறம் பூங்காவிற்குள் கேப்டீரியா கேன்டீன் நடத்த கடைஎண் 1க்கு, ரூ 3.51லட்சம், கடை எண் 2க்கு, ரூ. 4. 82 லட்சம்,. கடைஎண் 3க்கு ரூ. 5. 21 லட்சம், கடைஎண் 4க்கு, ரூ. 5.89 ஆயிரம், கிரிவீதி புளியமரங்கள், பனைமரங்களின் மேல்பலன் அனுபவிக்கும் உரிமம் ரூ. 9 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை கடந்தாண்டு ரூ. 10. 55 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆனால் இந்தாண்டு அதிக பட்சம் ரூ. 18. 18 லட்சம் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.