பொள்ளாச்சி அக்: 11
இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமான பொள்ளாச்சியில் முன்பதிவு செய்யும் அலுவலகத்தை மூடியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இது பற்றி சமூக ஆர்வலர் பரமேஸ்வரன் நம்மிடம் கூறுகையில் 10 வருடத்திற்கு முன்னாள் ஓடிய (கோவை – ராமேஸ்வரம் வழி: பொள்ளாச்சி) மீண்டும் இயக்காமலும், கொரோனா காலத்தில் சிறப்பு ரயில் என்று அறிவித்து சாதாரண கட்டணத்தை 100 மடங்கு ஏற்றியும் இன்று வரை குறைகமாலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இயங்கி வந்த முன்பதிவு செய்யும் அலுவலகத்தை மூடி பொது மக்களுக்கு மிகுந்த மன உழைச்சலும், அதிருப்தியும் எற்படுத்திய பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். முன்பதிவு அலுவலகத்தை உடனடியாக திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும், இதனால் கட்டண முன் பதிவு செய்யும் மக்களுக்கு ஒரு பயணசீட்டுக்கு சுமார் 120 ரூபாய் மிச்சமாகிறது. பொள்ளாச்சியை சுற்றி கல்லூரிகளும் சுற்றுலா தளங்களும் வேலைக்கு செல்பவர்களும் திடீரென்று மூடிய முன்பதிவு கட்டண சேவை இல்லாமல் தங்களது அன்றாட வேலைகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே மத்திய அரசு உடனடியாக பாலக்காடு கோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் முன்பதிவு கட்டண சேவையை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.