தஞ்சாவூர்.25.
தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி சார்பில் 3 நாள் ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி யின் நிறைவு விழா நடைபெற்றது.
சிறந்த ஓவிய சிற்பங்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவில் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார் மேயர் சண்.. ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் புகைப்பட நுணுக்க ங்கள் குறித்து பயிலரங்கம், காகிதக்கலை ,பொம்மலாட்டம், களிமண் சிற்பங்கள் என்ற பிரிவில் பயிற்சி பட்டறையும் நடைபெற்றது இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தங்களுடைய கலைத்திறன் மூலமாக அதன் சிறப்புகளை உலகறிய செய்ய வேண்டும்
தங்களது படைப்பு திறனை கொண்டு அரசு திட்டங்களுக்கு உதவ வேண்டும். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஓவிய சந்தை நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதிலும் கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி மாணவர் கள் பங்கேற்க வேண்டும் என்றார்.
விழாவில் முதல் 3 இடங்களை பிடித்த கலை படைப்புகளுக்கும், சிறந்த கலை படைப்புகளுக்கும் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக முதுநிலை விரிவுரை யாளர் அருளரசன் வரவேற்றார் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிறைவாக கல்லூரி முதல்வர் ரவி நன்றி கூறினார்