கொல்லங்கோடு, ஜன- 24
கொல்லங்கோடு அருகே நீரோடி தோனித்துறை பகுதியை சேர்ந்தவர் சைமன். இவர் மீன்பிடித் தொழிலாளி. இவரது வீட்டில் தற்போது பெயின்டிங் வேலை நடக்கிறது. கொல்லங்கோடு அருகே கேரளா பகுதியான பருத்தியூர் பகுதியை சேர்ந்த ஏசுதாசன் (28) என்பவர் மேலும் 4 பணியாளர்களுடன் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
நேற்று மாலை மாடிப்படியின் கீழ் பகுதியில் ஏசுதாசன் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது சுவரில் இருந்த மெயின் சுவிட்ச்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஏசுதாசன் தூக்கி வீசப்பட்டார். சக பணியாளர்கள் ஏசுதாசனை மீட்டு அந்த பகுதியில் உள்ளவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏசுதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.