தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாதயாத்திரை
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாதயாத்திரை தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது பாதயாத்திரை தென்காசி மாவட்டம் சிந்தாமணியில் துவங்கி தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது அதனை தொடர்ந்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தென்காசி பெரிய கோவில் அருகில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு,தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், முரளி ராஜா, ஈஸ்வரன், பெருமாள்,சட்டநாதன்,கதிரவன், ரஃபிக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.