தஞ்சாவூர் ஆகஸ்ட் 5.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 53 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருந்தி சிகிச்சை அளிக்கப்பட்டு ள்ளதாக முதல்வர் பாலாஜி நாதன் கூறினார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதயத்துடிப்பு குறைவாக உள்ளவர்களுக்கு அதனை சரி செய்ய தற்காலிக பேஸ்மேக்கர் கருவி, நிரந்தர பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சிகிச்சை மேற்கொண்டவர் கள் தொடர்ந்து மருத்துவ பரிசோத னைக்கு மாதாந்தோறும் வந்து செல்கிறார்கள். அவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இருதய நோய் நிபுணர்கள், செவிலியர்களுடன் அவர் ஆலோச னை நடத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேத் லேப் எனப்படும் இருதய உட்செலுத்தி கதிரியக்க ஆய்வு கூடம் 2019 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இதுவரை 9,975 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் மாரடைப்புக்கு உடனடியாக ஒரு மணி நேரத்திக்குள் செய்யும் சிகிச்சை 1,510 பேருக்கும், 24 மணி நேரத்திற்குள் 2,544 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதய துடிப்பு குறைவினால் மயக்கம் ஏற்படுவதால் உயிரிழப் புகள் ஏற்படுகிறது .அதனை சரி செய்ய தற்காலிக இதய துடிப்பு கருவி (பேஸ்மேக்கர்) பொருத்தப் படும் .அதன்படி ,இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 163 பேருக்கு தற்காலிக இதயதுடிப்பு கருவியும், 53 பேருக்கு நிரந்தர இதயத்துடிப்பு கருவியும் பொருத்தப்பட்டு சிகிச் சை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் சிலருக்கு சிறுவயதிலேயே இதய துடிப்பு குறைவாக ஏற்படுகி றது .அவர்களுக்கு இதயத்தில் இரு அறைகளிலும் இதய துடிப்பை தூண்டும் வகையில் கருவி 8 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை அளித்தால் ரூபாய் 4 இலட்சம் வரை செலவாகும். மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தமிழக அரசின் மருத்து வ காப்பீடு திட்டத்தில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
அப்போது இருதயத்துறை தலைவர் ஜெய்சங்கர் ,விபத்து மற்றும் சிகிச்சை பிரிவின் மாநில த்திட்ட மேலாளர் மருது துரை, கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.