அரியலூர், ஜூலை
அரியலூர் மாவட்ட புதிய ஆட்சித்தலைவராக பொ.ரத்தினசாமி (Thiru.P.Rathinasamy, IAS.,) நேற்று வெள்ளி கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்;.
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்ற பொ.ரத்தினசாமி 2009 ஆம் ஆண்டு குருப்-1 தேர்வில் வெற்றிபெற்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியராகவும், நாகபட்டிணம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆகவும், பதவி உயர்வுபெற்று NPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராகவும், தொடர்ந்து அண்ணாமலை பல்கலை கழக மாவட்ட வருவாய் அலுவலராகவும், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை தொகுதி 1 மற்றும் தொகுதி 2-ல் மேலாண்மை இயக்குநராகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராகவும், பதவி உயர்வுபெற்று சிப்காட் பொது மேலாளராகவும், வேலூர் மாநகராட்சி ஆணையராகவும், இராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகவும், வணிகவரித் துறை இணை ஆணையராகவும் பணியாற்றி, தற்போது அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.