வேலூர் 25
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கீழ்விலாச்சூர் பகுதியில் இன்று எருது விடும் விழா நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் சுமார் 150-க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்கள் விழாவில் பங்கேற்றனர்.
காலையில் ஓடுபாதையில் இளைஞர்கள் நின்று காளைகளை வழிமறித்தனர்
அதன் பின்பு அரசு அனுமதி அளித்த மதியம் 2 மணிக்கு மேல் விழா குழுவினர் எருது விடும் திருவிழாவை நிற்க வைத்தனர் அதன் பின்பும் எருதுகளை எடுத்து வந்த உரிமையாளர்களுக்கும் எருது விடும் விழா குழுவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட பின்பு இடையே அடிதடி ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரண்டு பிரிவினரையும் சமரசம் செய்த போலீசார் அதன் பின்பு தகராறு ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக எருது விடும் விழா 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது