மதுரை செப் 16
மதுரை
காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் பரிதவிப்பு
சரியாக வழிமுறை இல்லாத காரணத்தினாலும் பலவிதமான புதிய கட்டுப்பாடுகளாலும் ஆராய்ச்சி மாணவர்கள் தங்களுடைய படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
அப்படி பார்க்கையில் முதலில் ஆராய்ச்சி மாணவர்கள் இரண்டு கட்டுரைகள் வெளியிட வேண்டும் அது குறிப்பிட்ட கால அளவிற்குள் வெளியிட வேண்டும் அதுவும் குறிப்பிட்ட இதழ்களிலே வெளியிட வேண்டும் ஆனால் அவர்கள் குறிப்பிடும் வகையில் இதழ்களை ஆராய்ச்சி மாணவர்கள் தேடி கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே அவர்களுடைய அந்த ஆராய்ச்சி படிப்பிற்கான கால அளவு முடிந்து விடுகிறது. என்பது ஆராய்ச்சி மாணவர்களின் கூற்று. மேலும் ஆராய்ச்சி கட்டுரை என்ற பெயரில் பல பண மோசடிகள் நடைபெறுவதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
அது பற்றிச் சொல்லப் போனால் குறிப்பாகக் கணினி அறிவியலைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த ஆராய்ச்சி கட்டுரைகளின் உண்மை தத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்
முக்கியமாக ஆன்லைன் சூதாட்டத்தை விட போலி ஆராய்ச்சி கட்டுரைகளை நடத்தி பல மோசடி இணையதளங்கள் மூலம் இந்த மோசடிகள் நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த நூதனமான
பண மோசடி கும்பலை கண்டறிய முடியாத சூழ்நிலை நிலவுகிறது இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மாணவரும் இதில் ஐந்தாயிரம் முதல் 50,000 மற்றும் லட்ச ரூபாய்க்கு மேல் இந்த மோசடி இணையதள வழியில் இழக்கின்றனர். நிலை இப்படி இருக்க ஆராய்ச்சி முனைவர் பட்டம் முடிப்பதற்கு தங்களுக்கு நியமிக்கப்பட்ட சூப்பர் வைசர்கள் சி.ஏ.எஸ் என்ற ப்ரோமோஷன் காக அவர்களுடைய பெயரையும் சேர்த்து போடுவதால் ஒரு நபருக்கு இவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்து அதில் இரண்டு நபர்களைச் சேர்த்து கட்டுரையின் கட்டணம் என்ற பெயரில் ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் வசூலிப்பு செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் சூப்பர்வைசர்களின் முக்கியத்துவத்தை மட்டுமே மேம்படுத்தி மாணவர்கள் இரண்டு கட்டுரைகளைப் போடுவதால் அதில் மாணவர்களுக்கு எந்த வித புண்ணியமும் இல்லை இதில்
பண மோசடி சிக்கல் என்ன வென்றால் இரண்டு கட்டுரைகள் சமர்ப்பிக்கவில்லை என்றால் மேலும் கட்டணம் கட்ட வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு மாணவர்கள் சிக்கி சின்னா பின்னம் ஆகின்றனர்.
குறிப்பாகப் பெண்கள் என்று எடுத்துக் கொண்டால் இன்று படிக்கும் இடத்தில் பலவிதமான இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பெண்கள் வாழ்க்கையில் திருமணம் ஆன பிறகு கணவன் முதல் உறவினர்கள்வரை அனுமதி வாங்கி படிப்பதில் இவர்கள் காட்டும் முனைப்பை இது போன்ற தடைகள் ஏற்பட்டு கர்ப்பிணி பெண்கள் இன்னும் தங்களுடைய ஆராய்ச்சி படிப்புகள் முடிப்பதற்கு கட்டுரைகளைத் தேடித் தேடி அலைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து சில மாணவர்களிடம் கருத்து கேட்ட பொழுது ஏன் முனைவர் பட்டம் படிக்க வந்தோம் இதனால் எங்கள் வாழ்க்கை பயணம் சிதைந்து போகிறது என்று தெரியாமல் இருக்கும் நாங்கள் எப்போது சமர்ப்பிப்போம் எப்போதாவது சமர்ப்பிக்க முடியுமா முடியாதா என்ற குழப்பத்தில் இருக்கின்றோம் என்றே கூறுகின்றனர்.
நிலமை இப்படி இருக்க ஆராய்ச்சிக்கு உதவியாளராக இருக்கும் பேராசிரியர்களிடம் இது குறித்து கேட்ட போது அவர்களுக்கு இதற்கான வழியும் தெரியவில்லை அதற்கான விடையும் கிடைக்கவில்லை குறிப்பாக தெற்கு இந்தியாவில் இது போன்ற கட்டுரை அமைப்புகள் கிடைப்பதில் மிகவும் சிரமமாகவே உள்ளது வட இந்தியாவில் இது போன்ற கட்டுரை அமைப்புகள் உண்டு அதில் எது உண்மைத்துவம் ஆனது எது உண்மைத்துவம் அற்றது என்பதை கண்டறிவதுற்குள் காலங்கள் ஓடுகின்றன. இதைப் பற்றிப் பல பல்கலைக் கழகங்கள் வழியாக நாம் அறிந்த செய்திகளாகவே உள்ளது.
அந்த வகையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பல குழப்பங்களும் பல கழகங்களும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது ஆராய்ச்சி மாணவர்கள் அனாதையாக விடப்பட்டுள்ளனர் அவர்களின் கதி அவர்களது சூழ்நிலை புரியாமல் அந்த ஆண்டு முடிந்து விட்டது என்றால் அடுத்த ஆண்டு தொடங்குவதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் சூப்பர்வைசர்கள் சிலர் பெயர் குறிப்பிடவில்லை சில மாணவர்களை தங்களுடைய சுய வேலைகளுக்காக உபயோகிக்கின்றனர். என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
மேலும்
குரூப்பில் சில கட்டுரை அமைப்புகள் பாடங்களுக்கு எளிதாகக் கிடைத்தாலும் சில பாடங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. குறிப்பாக சமூக அறிவியல் வகையைச் சேர்ந்த சில பாடப்பிரிவுகளுக்கு கட்டுரைகள் கிடைப்பதில் மிகவும் சிரமமே உள்ளது கடந்த 10 மாதங்களில் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய படைப்புகளை சமர்ப்பித்துள்ளனர்.
இதனால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் வேலையை இழந்து படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தை இழந்து அவர்களின் மனநிலை மனோபலம் அனைத்தும் தொலைந்து உள்ளது. மாணவர்களின் இந்த நிலைக்கு பல்கலைக்கழகம் காரணமா? இல்லை தரன் நிர்ணயம் காரணமா என்பதை உணர்ந்து இதற்கான நடவடிக்கையில் பல்கலைக்கழக உயர்மட்டக் குழு களமிறங்கி இதற்கான தீர்வை உடனடியாக செயல்படுத்தினால் மட்டுமே மாணவர்களின் நிலை முன்னேறும் என்று தெரிகிறது.
ஏனென்றால் இன்று ஆசிரியர்களுக்கு தகுதி அடிப்படை என்று பார்த்தால் முனைவர் பட்டமே முதன்மைப்பட்டதாக உள்ளது அப்படிப்பட்ட பட்டத்தைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் பொழுது முனைவர்களின் எண்ணிக்கை குறையும் நிலையில் இன்றும் பல கல்லூரிகளில் முனைவர்கள் இல்லாமல் தகுதியில்லாத ஆசிரியர்களை வைத்தே பாடங்கள் நடத்தப்படுகின்றனர்.
தற்பொழுது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து ஆராய்ச்சி மாணவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும்
ஆராய்ச்சி மாணவர்களின் கஷ்டத்தை மட்டும் மேற்கோள் காட்டுவது மட்டுமல்ல இதன் பின்னாடி பல ஆன்லைன் சூதாட்டத்தை விட மிக மோசமான ஒரு குழு செயல்படுகின்றது
அந்த மோசடி கும்பலைக் கண்டு பிடித்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவ மாணவிகள் ஆதங்கத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர்.