ஈரோடு மே 17
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஆய்வு கூட்டத்தில் பேசி வருகிறார் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை ஆய்வு கூட்டம் ஈரோடு ஜவஹர் இல்லத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தது தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை இதில் கலந்து கொண்டு பேசினார்
அப்போது அவர் பேசியதாவது
நான் செல்லும் இடமெல்லாம் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இல்லை.வட்டார தலைவர்கள் சங்கடத்தில் உள்ளனர் என்ற தகவலை கேட்கிறேன் தோழமை கட்சியினர் யாரும் எங்களை மதிப்பதில்லை சாதாரண இயக்கம் போல் பேசுகிறார்கள் என்றும் உங்களிடம் பூத் கமிட்டி இல்லை கட்சி இல்லை என்று வெளிப்படையாக பேசுகிறார்கள் என்றும் கூறுகிறார்கள்
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவதாக நாம் கூறுகிறோம் முயற்சி செய்தால் அந்த ஆட்சியை கொண்டு வரலாம் வெகு தொலைவில் அது இல்லை இது எங்கள் உரிமை எங்கள் கருத்தை சொல்கிறோம் ஆனால் திமுகவுக்கு எதிராக இருக்கிறோமா என்றால் இல்லை முதலமைச்சரை கேட்டால் கூட பாஜக பாமக நாம் தமிழர் கட்சி வளர்வதை விரும்பவில்லை என்று தான் கூறுவார்
காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தினால் எது வேண்டுமானாலும் நடக்கும் இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த முடியும் இது நம்மால் முடியும் ஆனால் வெறுப்பு அரசியலை நாம் செய்வது இல்லை மற்றவர்கள் மனதை புண்படுத்தும் அரசியலை நாம் செய்வதில்லை
முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் கொண்டு வரும் திட்டங்களை நாம் பாராட்டுகிறோம் நமது கட்டமைப்பை வலுப்படுத்தினால் தான் ஜனநாயகம் வளரும் கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சி நாட்டை சின்னா பின்னம் ஆக்கிவிட்டது மத ஜாதி ரீதியாக ஏற்றத்தாழ்வோடு ஒரு ஆட்சி நடக்கிறது உங்களால் காங்கிரசை வலுப்படுத்த முடியவில்லை
என்றால் பாஜக என்ற பாசிச சக்தியை ஒழிக்க முடியாது காமராஜர் ஆட்சி என்பது ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கனவாகும் அதை நிறைவேற்ற காங்கிரசை வலிமைப்படுத்த வேண்டும் ராகுல் காந்தி கரம் வலுப்படுத்த வேண்டும் என்றால் காங்கிரஸ் வலிமையாக இருக்க வேண்டும் தேசம் வலிமையாக இருக்க வேண்டும் அதற்காக கட்சியை வலுப்படுத்துவோம் இவ்வாறு அவர் பேசினார்
இதன் பிறகு செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது
பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் ஒவ்வொரு வங்கிகணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்றும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெட்ரோல் ,டீசல், விலையை குறைப்பேன் என்றும் பொய்யான வாக்குறுதியை மோடி கூறினார் ஆனால் அவரால் இதை நிறைவேற்ற முடியவில்லை
அவரை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை பாரதிய ஆட்சி காலாவதியாகிவிட்டது மோடியை மக்கள் நிராகரித்து விட்டார்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்த மக்கள் முடிவு செய்து விட்டார்கள் உத்தரபிரதேசம் அவர்களது கோட்டை என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ராகுல் காந்தி பிரியங்காவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து உறைந்து போய் இருக்கிறார்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வராது என்று உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது இதனால் எப்படியாவது குட்டிக் காரணம் அடித்தாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடி முயற்சி செய்து வருகிறார் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது தேவைப்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்
இவ்வாறு அவர் கூறினார்.