ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் தெய்வச்செயல்புரம் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சி.சண்முகையா கலந்து கொண்டார். அங்கு அனைத்து துறைகளின் சார்பில் நடைபெற்ற பணிகளை ஆய்வு செய்தார் .பின்னர் பயனாளிகள் 15 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ஆணையை வழங்கினார்.
இந்த முகாமில் வட்டாட்சியர் சிவகுமார் ,சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் லிங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன்,APO நாராயணன், கருங்குளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும் கிழவல்லநாடு பஞ்சாயத்து மன்றத்துணைத்தலைவருமான சுரேஷ் காந்தி, எல்லை நாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் மங்கள சுந்தரி சின்னத்தம்பி, செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமிஅய்யம்பெருமாள், வடக்கு காரசேரி பஞ்சாயத்து தலைவி பேச்சியம்மாள், மற்றும் மாரியப்பன் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.