கிருஷ்ணகிரி அருகே இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி!
கிருஷ்ணகிரி மாவட்டம் எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மையம் அலுவலக வளாகத்தில் வேளாண்மை அறிவியல் மையம் தமிழ்நாடு காலநிலை மாற்றம் இயக்கம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் இயற்கை வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் கலந்து கொண்டு பஞ்சகாவியம் ஜீவாமிர்தம் இயற்கை விவசாயத்தை எப்படி செய்வது பசுசானம், பசுமாட்டு கோமியம்,, கரும்புச்சாறு, நாட்டுச்சக்கரை, ஈஸ்ட், இளநீர், நெய், வெல்லம், பால், தயிர், வாழைப்பழம் மற்றும் ஜீவாமிர்தம் பசுசாணம் பசு கோமியம் நாட்டுச்சக்கரை பயிறு மாவு மண் தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை 200 லிட்டர் பேரலில் ஊர வைத்து இயற்கை முறையில் பயன்படுத்தும் முறையை வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தெளிவாக உதவி வேளாண்மை இயக்குனர்களுக்கு பயிற்சி அளித்தார். உடன் முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ், தோட்டக்கலைத்துறை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணவேணி, தொழில்நுட்ப வல்லுநர்கள் ரமேஷ் பாபு, குணசேகர், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர் இந்த நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட உதவி வேளாண்மை இயக்குநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.