மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தில் 700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை எம்எல்ஏ நிவேதாமுருகன் வழங்கினார்:-
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி 2009-ம் ஆண்டில் தமிழகத்தில் இருக்கின்ற 20 லட்சம் வீடுகளையும் கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என்ற கலைஞரின் வீடு வழங்கும் திட்டத்தில் மாற்றித்தந்தார்கள். அதை தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் கனவு இல்லம் திட்டமாக ஒரு வீட்டிற்கு ரூ.3.50,000 வீதம் கிட்டத்தட்ட இந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டத்தில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் 3000 வீடுகளுக்கு ரூ.105 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி செம்பனார்கோவில் ஒன்றியத்தில் 700 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, அதற்கான பணி ஆணை வழங்கும் விழா செம்பனார்கோவில் கிராமத்தில் இன்று நடைபெற்றது. இதில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார். இதில், ஒன்றிய குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் , மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.