மதுரை ஜூலை 24,
மதுரை மாநகராட்சி மேயர்
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை உத்தரவு.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றத்தில் உள்ள மேற்கு மண்டலம் 5 அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி தொடர்பாக 6 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், குடிநீர் இணைப்பு வேண்டி 5 மனுக்களும், பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி 12 மனுக்களும், சாலைகள் வசதி வேண்டி 5 மனுக்களும், தெருவிளக்கு வசதி வேண்டி 2 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டி 10 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 17 மனுவும் என மொத்தம் 59 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்த மேயர் அவர்களால் நேரடியாக பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சுவிதா, துணை ஆணையாளர் சரவணன். தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார். மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற் பொறியாளர் (திட்டம்) மாலதி, உதவி ஆணையாளர் (வருவாய்) மாரியப்பன். உதவி ஆணையாளர் ராதா, உதவி வருவாய் அலுவலர் முகம்மதுபாரூக், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.