திருப்பூர் ஜூலை: 23
எம் எஸ் நகர் சந்திரா காலணியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மத்தியில் இருக்கின்றது தனியார் பார் இவ்விடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் இடைவெளியில் தெற்கே ஸ்ரீ வீர காளியம்மன் திருக்கோவிலும் சுமார் 30 அடிக்கு கிழக்கே பட்டத்தரசியம்மன் திருக்கோவிலும் மேலும் தனியார் பார் அமைய உள்ள இடத்தின் நேர் எதிர் பாதையில் மசூதியும் அமைந்துள்ளது.
தனியார் பார் அமைய உள்ள இடம் நான்கு வழி சாலை என்பதால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் ஜங்ஷன் ஆக உள்ளது பார் அமையும் இடத்தைச் சுற்றிலும் பாதை மிகவும் குறுகலாக உள்ளது.
அவ்வழியாக நெசவாளர் காலனி அரசு பள்ளி மற்றும் ஈஸ்வரி வித்யாலயா பள்ளி விகாஸ் பள்ளி நிர்மலா பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளுக்கு தினம் தோறும் காலையும் மாலையும் சென்றுவர கூட பகுதிகளாக உள்ளது.
தொழில் நகர பகுதி என்பதால் மக்கள் எல்லா நேரங்களிலும் அப்பாதையை மிகுந்த நெரிசலுக்கு இடையில் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தனியார் பார் அமைய உள்ள இடத்தின் மிக மிக அருகில் சுமார் 20 அடியில் அரசு மதுபான கடையும் மற்றும் அரசு அனுமதி பெற்ற பார் ஒன்றும் மதுபான கடையை ஒட்டியே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இப்பகுதியில் தனியார் பார் அமைந்தால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
ஆகவே தனியார் பார் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று சந்திரா காலணியில் வசிக்கும் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆட்சியாளர் அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.