மயிலாடுதுறை நகராட்சி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகராட்சி வார்டுகளை விரிவாக்கம் செய்யும் பணிகளை நகராட்சி நிர்வாகம் முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில் மயிலாடுதுறையை ஒட்டியுள்ள மன்னம்பந்தல், ரூரல் ஆகிய இரண்டு ஊராட்சிகளை இணைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த மன்னம்பந்தல் மற்றும் ரூரல் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மயிலாடுதுறை நகராட்சியுடன் தங்கள் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் மயிலாடுதுறை நகராட்சியுடன் இணைக்க கூடாது என இரண்டு ஊராட்சிகளிலும் கிராம மக்களால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்ணம்மந்தல் ஊராட்சியை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியர் மனு கொடுத்து போராட்டம் நடத்த உள்ளர் மேலும் ரூரல் ஊராட்சியில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.