தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பூந்தமல்லி கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் போஜனத்தை கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் விவசாயம், ஆடு, மாடுகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருகிறோம்.
அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபை கூட்டத்தில் கல்குவாரி வேண்டாம் என்று ஒருமனதாக ஊர் மக்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுவே எங்கள் வாழ்வாதாரமாக உள்ளது. விவசாயத்தை காத்திட வேண்டும் எனவும் எப்பொழுதும் எங்கள் ஊருக்கு கல்குவாரி அமைக்க அனுமதி வழங்க வேண்டாம் எனவும் அந்த மனுவில் கூறியிருந்தனர்.