நாகர்கோவில் மார்ச் 1
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் நேற்று வெளியிட்டுள்ள தமது செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த தவணை மற்றும் அதிக பிரீமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி (Postal Life Insurance) மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி(Rural Postal Life Insurance)சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்கள் தவணைத் தொகையை செலுத்தத் தவறி விடுவதால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. காலாவதியான பாலிசிகளை அபராதத் தொகையுடன் தான் புதுப்பிக்க இயலும்.
தற்போது அஞ்சல் ஆயுள் காப்பீடு இயக்குநரகமானது 01.03.2025 முதல் 31.05.2025 வரையிலான காலகட்டங்களில் தங்கள் காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அபராதத் தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை அதிகபட்சம் ரூ 2,500 முதல் ரூ 3,500 வரை விலக்கு அளிக்கும் சலுகையை அறிவித்துள்ளது. விவரங்களுக்கு நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகங்களிலும் மற்றும் அனைத்து துணை மற்றும் கிராமப்புற தபால் நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி காலாவதியான பாலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதற்கு தேவைப்படும் ஆவணங்கள்
விண்ணப்பக் கடிதம்,
பிரீமியம் செலுத்தும் புத்தகம் மற்றும்
மருத்துவச் சான்று ஆகியவை ஆகும். என அதில் கூறப்பட்டுள்ளது.