கிருஷ்ணகிரி டிச 13:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம்,பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் .கே எம். சரயு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். பாசனத்திற்காக ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் ஐந்து நாட்களுக்கு நாற்று விட தண்ணீர் விட்டும் பிறகு முறை பாசனம் மூலம் மூன்று நாட்களுக்கு மதகை திறந்து விட்டோம் நான்கு நாட்கள் மதகை மூடி வைத்து சுழற்சி முறையில், நாள் ஒன்றுக்கு ஆறு மில்லியன் கன அடி வீதம் 130 நாட்களுக்கு மொத்தம் 355 மில்லியன் கன அடி இரண்டாம் பாக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டதை அடுத்து விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) அறிவொளி, வேளாண்மை இணை இயக்குனர், நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் சாந்தமூர்த்தி, தமிழ்செல்வி, சுந்தரமூர்த்தி, சண்முகானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் பெரியசாமி மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.சத்யா, வேளாண்மை துறை பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்பட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.