ஏப்ரல்: 11
மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரில் உள்ள முத்துசாமி பிரதர்ஸ் இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸில் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் சார்பில் திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் கிளை அச்சகம் திறப்பு விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி, துணை பணி மேலாளர் ராஜ்குமார், தலைமைப் பொறியாளர் (பொ) செல்வநாயகம், உதவி ஆணையர் வினோத் ஆகியோர் உள்ளனர்.