மானாமதுரை டிச:01
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் மேலப்பசலை ஊராட்சியில் கிளாங்காட்டூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு புதிதாக கட்டப்பட்டுள்ளது.
அதனை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் லதா அண்ணாத்துரை மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிந்துஜா சடையப்பன் மாவட்ட திமுக மகளிரணி துணை அமைப்பாளர் வளர்மதி கலைச்செல்வன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் ர.தமிழரசி. ரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிளைக் கழக நிர்வாகிகள் சடையப்பன் தேசிங்கு ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.