மதுரை மே 31
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பில் ஒரு கோடிக்கு மேல் கிடைக்க பெற்றது உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் ச.கிருஷ்ணன முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணப்படும். அதன்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின் போது திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், துணை ஆணையர் / செயல் அலுவலர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள். திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.1,13,92,350/- (ரூபாய் ஒரு கோடியே பதிமூன்று இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து முந்நூற்றி ஐம்பது மட்டும்). பலமாற்று பொன் இனங்கள் 397 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 548 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 253 எண்ணம் வரப்பெற்றுள்ளன. கோவில் உண்டியல் எண்ணிக்கை பணிகள் முழுவதும் கோவில் இணையதளம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.