தேனி அக் 26:
தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி வெம்பக்கோட்டையில் அங்கன்வாடி மையத்தை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
சட்டமன்ற உறுப்பினர் நிதி 2021 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஓபிஎஸ் பரிந்துரையின் படி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். பின் உள்ளே சென்று குத்துவிளக்கேற்றி மறைந்த முன்னாள் முதல்வர் கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்விற்கு வரவேற்பாளராக சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன். மேலும் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பகுதியில் உள்ள பெண்கள் ஆரத்தி எடுத்து கலச கும்பத்துடன் வரவேற்றனர். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் ஓபிஎஸ் யை பார்ப்பதற்கு காத்திருந்ததைக் கண்டு அவர்களை நலம் விசாரித்து நன்றாக படிக்கும்படி அறிவுறுத்திச் சென்றார்.