ஊட்டி. ஜன. 28.
2025 ஆம் வருட சிறந்த காவல்துறைக்கான ஜனாதிபதி விருது பாராட்டு, பத்திரம் ஊட்டி தாவணே கிராமத்தை சார்ந்த கணேசன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் பள்ளி படிப்பு முடித்து இயற்பியல் பட்ட மேற்படிப்பையும் முடித்தவர். இதன் பின் ஆசிரியர் ஆகும் எண்ணத்தில் பிஎட் படிப்பையும் முடித்தார். சிறந்த கால்பந்து வீரரான கணேஷ் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. காவல்துறை உதவி ஆய்வாளராக தேர்வு எழுதி 1997இல் காவல் பயிற்சியை முடித்தார். கோவை குண்டுவெடிப்பு நிகழ்விலிருந்து பல்வேறு சவால்களை சந்தித்து தொடர்ந்து காவல் பணியில் முன்னோக்கி சென்றார். 2008இல் பதவி உயர்வு பெற்று கோவை பகுதியில் சிறப்பாக செயல்பட்டு பல குற்றவாளிகளை பிடித்து உயர் அதிகாரிகளின் பணிக்காக பொது மக்களின் ஆதரவையும், ஊக்கமும் ஆக்கமும் அளிக்க 2017ல் சிறந்த காவல் அதிகாரி பணிக்காக தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் மூலம் அண்ணா விருதும் கிடைத்தது. தொடர்ந்து கோவையில் காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் கணேஷுக்கு மக்களின் நம்பிக்கை நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப்பெற இவரது பணி சிறப்பு டெல்லி வரை சென்றது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதைப் பெற்று நீலகிரிக்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். ஜனாதிபதி விருது பெற்ற கணேஷ் அவர்களுக்கு தினத்தமிழ் நாளிதழ் மூலம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். ஜனாதிபதி விருது பெற்ற கணேஷ் அவர்களை தமிழக காவல்துறை வெகுவாக பாராட்டி உள்ளது.