திண்டுக்கல் எம்.எஸ்.பி சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து நடத்திய தேசிய நல்லாசிரியர் இரத்தின பாண்டியன் நினைவு மாநில அளவிலான ஒன் சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டியை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம். பி. காஜா மைதீன் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்த போது அவருக்கு பொன்னாடை போர்த்தி விழா குழுவினர் வற்வேற்பு அளித்தனர். மேலும் நாட்டாண்மை டாக்டர்.
என்.எம் பி. காஜாமைதீன் அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதில் தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக மாநில துணைத்தலைவர் டாக்டர். எ.சீனிவாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.