திண்டுக்கல் வக்கம்பட்டியில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிகரங்களை நோக்கி இரண்டாம் நிகழ்வு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி முனைவர். பா. மூர்த்தி IPS தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் நாகா குழுமம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலா படிப்பக அறங்காவலர் K. S.கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறுவர் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உன்னால் முடியும் என்ற தலைப்பில் வடமதுரை ஆசிரியர் எஸ்.லோகமணி, அறிவுலகில் உலாவு என்ற தலைப்பில் திண்டுக்கல் பன்முகத்திறனாளர் ஆரா. அருணா, விரும்பியதை செய் என்ற தலைப்பில் திண்டுக்கல் சுகாதார இணை இயக்குனர் அலுவலக தொழிலக பாதுகாப்பு உதவியாளர் பா. தங்கம், அறிவியல் போற்று என்ற தலைப்பில் அறிவியல் ஆசிரியர் எஸ். லலிதா, இளையோர் 9-ஆம் வகுப்பு முதல் 11 -ஆம் வகுப்பு வரை பருந்தாயிரு என்ற தலைப்பில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி செயலாளர்
அருட்தந்தை சைமன் செபாஸ்டின், சிகரங்களைத் தொடு என்ற தலைப்பில் திண்டுக்கல் தமிழ் ஆசிரியர் (ஓய்வு) பெ. கோவிந்தராஜ், சவால்களை சந்தி என்ற தலைப்பில் திண்டுக்கல் GTN. கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் முனைவர். வெ. முத்துலட்சுமி, வாசிப்பை நேசி என்ற தலைப்பில் திண்டுக்கல் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல வாரிய கருத்தாளர் சோ. ஆல்பர்ட் பெர்னான்டோ, இளைஞர்கள் 12 – ஆம் வகுப்பு மேல் கல்லூரி வரை ஆட்சியதிகாரம் என்ற தலைப்பில் சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர், இயக்குனர் க. ஜெயபாலன், எழுத்தாளுமை என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் எழுத்தாளர் கோவை கா.சு. வேலாயுதன், தலைமை பண்பு என்ற தலைப்பில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் Rtn. ஜெய் பார்த்திபன், புதுக்கோட்டை ஸ்ரீ பாரதி கல்வி நிறுவனங்கள் அறங்காவலர் Rtn. பொறியாளர் பஷீர் அகமது, மென் திறன் என்ற தலைப்பில் திண்டுக்கல் MVM அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் முனைவர் K.M. சுமதி ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறையை சிறப்பாக நடத்தினார்கள். இந்நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவிற்கு திண்டுக்கல் மேயேரிஸ் பல் மருத்துவமனை நிறுவனரும் படிப்பக இயக்குனருமான மருத்துவர் செந்தில்குமார் பழனிச்சாமி கலந்துகொண்டு உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஒருநாள் பயிற்சி பட்டறை சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் பாலா படிப்பக செயல்பாடுகள் இயக்குனர் ஆசிரியர் S.சவரிமணி, ஆலோசகர் பேராசிரியர் R. மனோகரன், நிதி நிர்வாக இயக்குனர் கண்ணன் மற்றும் பிற இயக்குனர்கள், புரவலர்கள், ஆலோசர்கள், தன்னார்வலர்கள், படிப்பக மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிகளை
பாலா படிப்பக நிர்வாக இயக்குனர் MJF.Lion.Er. நல் நாகராசன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வக்கம்பட்டி பாலா படிப்பகம் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கான உதவிகளை சென்னை சிவராம் குரூப் ஆஃப் கம்பெனிஸ், திண்டுக்கல் உதயம் லயன்ஸ் சங்கம் மற்றும் வக்கம்பட்டி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் ஆகியோர் சிறப்பாக செய்தனர்.