சென்னை வண்டலூரில் உள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் பல்கலைக்கழகத்தின்
பாலிமர் பொறியாளர்கள் குழு மற்றும் கிரசண்ட்
பாலிமர் இன்ஜினியரிங் துறை சார்பில் காம்போசிட் தொழில் துறையில் புதுமைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்த தேசிய அளவிலான ஒரு நாள் சிறப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிரசண்ட் பல்கலைக்கழக இணை துணை வேந்தர் டாக்டர். என்.தாஜூதீன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக அசென்ட் பெர்ஃபார்மென்ஸ் மெட்டீரியல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் கே.ஜெகநாதன்.
கலந்து கொண்டு காம்போசிட் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி குறித்து உரையாற்றினார், பாலிமர் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களின் எதிர்கால தேவை குறித்தும் எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, இன்று பாலிமர் துறையால் இந்த உலகம் இயங்கி கொண்டிருகிறது. ஒவ்வொருவரும் காலை எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை பாலிமர் துறையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை தான் பயன்படுத்தி வருகின்றோம் வரும் காலத்தில் பாலிமர் துறைக்கு நல்ல எதிர்கால உள்ளது. மேலும் தற்போது ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இன்னும் பாலிமர் துறை நல்ல வளர்ச்சி அடையும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் விரைவாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாலிமர் துறையில் வேகமாக பணியாற்ற முடியும் என்றார்.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு பாலிமர் கலவை தயாரிப்பு செயல்முறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.
இந்த பயிற்சி பட்டறையில் சென்னையைச் சேர்ந்த ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் N ராஜா உசேன், டீன் டாக்டர். எச்.சித்தி ஜெய்லானி பல்கலைகழக சேர்க்கை இயக்குனர் அப்துல் மஜீத், கிரசண்ட் பாலிமர் என்ஜினியரிங் துறைத் தலைவர் டாக்டர். சம்சாத் பேகம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். பசந்த குமார் பெகரா மற்றும் பாலிமர் துறை மாணவர்கள், மற்றும் பேராசியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.