திண்டுக்கல் ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கம்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மூன்றாம் ஆண்டு வணிக நிர்வாகவியல் மாணவி ஜி.நித்தி வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சிக்கு
சிறப்பு விருந்தினரை மூன்றாம் ஆண்டு மாணவி தர்மர் தேவ தர்ஷினி அறிமுகம் செய்து வைத்தார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் முனைவர். அகிலாண்டேஷ்வரி கருத்தரங்க நோக்கவுரை நிகழ்த்தினார்.
ஆத்தூர் கூட்டுறவுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளர்ச்சி அலுவலர் மற்றும் மேலாளர் R. கணேசன் அவர்கள்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர் விஜய் மேலாண்மைக் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் புலத்தலைவர் முனைவர்.C.சமுத்திர -ராஜ்குமார், மாணவர்கள் மத்தியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி மாணவர்களிடையே
எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் இரண்டாம் ஆண்டு மாணவர் M.சக்திவேல் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது.