நாகர்கோவில் நவம்பர்,19-
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக் ராஜ் தலைமையில் மண்டல செயலாளர் வழக்கறிஞர் பெல்வின் ஜோ முன்னிலையில் நாகர்கோவில் தொகுதி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. அவர்கள் வழங்கிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது :-
திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் வழியாக திருவனந்தபுரம் சென்றடைகிறது. இந்நிலையில் கிருஷ்ணன்கோவிலில் கழிவுநீர் ஓடையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள மதில்சுவர் தேசிய நெடுசாலையின் மீது போடப்பட்டுள்ளது. இதனால் சாலை சுருங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து செல்லும் கிளை சாலையில் வடசேரி காவல் நிலையம், உணவு பாதுகாப்பு துறை அலுவலகம் என அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள முக்கிய மக்கள் குடியிருப்பு பகுதியாகும். மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் ஒதுங்க கூட முடியாத அளவுக்கு அந்த மதில்சுவர் நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலைக்கு வந்து தான் மக்கள் தங்கள் வாகனங்களை திருப்ப முடியும் என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த சாலை கனிமவளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையாகும். மக்கள் கூட்டம் எப்போதும் அதிகம் உள்ள ஒரு சாலையில் திட்டமின்றி அலட்சிய போக்கில் கட்டப்பட்டுள்ள அந்த மதில்சுவர் விபத்துகளை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதால் அந்த மதில் சுவற்றை சாலை பாதுகாப்பு கருதி விபத்துகளால் உயிர்பலி ஏற்படும் முன் அகற்றிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
உடன் மாநில மகளிர் அணி பாசறை ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிஃபர், பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் சிலன், நாகர்கோவில் வடக்கு தொகுதி தலைவர் தனுஷ் குமார், முத்துகுமார் , ஜெயன்றீன், ஆறுமுகம், சொக்கலிங்கம், ஜாண், தீபக் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மற்றும் நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் தொகுதியினர் பலர் கலந்து கொண்டனர்.