மயிலாடுதுறையில் திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி; திமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் விநியோகம்:-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் திமுக சார்பில் களத்தில் இளைஞர் அணி நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றியத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் என்.இளையராஜா தலைமையிலும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.மருது ஏற்பாட்டிலும் தொடங்கிய நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் பி.எம்.அன்பழகன், மண்டல தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மற்றும் ஒன்றிய, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று தமிழக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களையும் வழங்கி ஆதரவை திரட்டினர். இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இளைஞரணி சார்பில் களத்தில் இளைஞர் அணி நிகழ்ச்சி நடைபெற்று வீடு வீடாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.