தஞ்சாவூர் அக்.17.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பவுர்ணமியையொட்டி தென்கயிலாய திருச்சுற்று வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றி பக்தர்கள் நடந்து செல்வத ற்கு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் இந்திய தொல்லியல் துறையினர் ஏற்பாடு செய்தனர்.
ஆனால் இந்திய தொல்லியல் துறை பராமரிப்பு குடமுழுக்கு பணிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த பெரிய கோவிலை பக்தர்கள் வலம் வரும் நிகழ்ச்சி சில மாதங்க ளில் நின்று போனது. இதற்கிடை யில் பெரிய கோவிலை சுற்றி உள்ள பாதையை சரி செய்து மீண்டும் பக்தர்கள் வலம் வருவதற் கு ஏதுவாக புதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பக்தர்களும், சிவனடியார்களும் கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம்,அரண்மனை தேவஸ்தானம், மாநகராட்சி நிர்வாகம் ,தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை ஆகியவற்றின் முயற்சியின் மூலம் 10 ஆண்டுகளு க்குப் பிறகு மீண்டும் கடந்த மாதம் பௌர்ணமி நாளில் பெரிய கோவில் தென்கைலாய திருச்சுற்று வலம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதைப்போல் புரட்டாசி மாத பவுர்
ணமி தென்கைலாய வலம் வரும் நிகழ்ச்சியை மராட்டா கோபுரத்தின் கீழ் பகுதியில் உள்ள விநாயகரை வழிபட்டவுடன் மேளதாளம் முழங்க திருவையாறு ஐயாறபபர் யானை முன் செல்ல மயிலாட்டம், காளை யாட்டத்துடன் பக்தர்கள் தென் கைலாய வலம் வந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வந்து கோவிலுக்கு சென்று பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனத்தின் திருவையாறு கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்சிலே ,சதய விழா குழு தலைவர்செல்வம், மாநகராட்சி மண்டல குழு தலைவர் மேத்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த தென் கயிலாய திருச்சுற்று வலம் நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது.