கிருஷ்ணகிரி, செப்.8-
கிருஷ்ணகிரியில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 146 -ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கிருஷ்ணகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யத்தில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் கீழ்கண்ட தலைப்புகளில் மாணவர் பேசினர். 1).பெரியார் ஒரு கேள்விக்குறி? ஆச்சரியக் குறி!, 2). என்றும் தேவை பெரியார், 3). பெரியார் காண விரும்பும் சமுதாயம், 4). மண்டை சுரப்பை உலகு தொழும், 5). புரட்சியாளர் பெரியார், 6). பெரியாரால் வாழ்கிறோம். 7). பெரியார் பிறவாமல் இருந்தால், 8). சுயசிந்தனையாளர் பெரியார் ஆகிய தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகளை பெற்றனர். முதல் பரிசு ரூ2000/- கிருஷ்ணா பி.எட். கல்லூரி மாணவர் மு.சந்தோஷ்குமார், இரண்டாம் பரிசு ரூ1500/- சட்டக் கல்லூரி மாணவி மா. வான்மதி, மூன்றாம் பரிசு ரூ1000/- பி.எஸ்.வி. கல்லூரி மாணவி அ.மோனிகா ஆகியோர் பரிசுகளை பெற்றனர். சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் கலந்துக்கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, நகர செயலாளர் அ.கோ.இராசா, மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், குட்டப்பள்ளி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக நிர்வாகி ஆர்.எம். ஜெயின் நன்றி கூறினார்.