சேலம்,
நடிகர் ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற சார்பில் செவ்வாய்ப்பேட்டை விழியிழந்தோர் பள்ளிக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவிற்கு குரால்நத்தம் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பாரப்பட்டி கனகராஜ் தலைமை தாங்கி கேக் வெட்டி குழந்தைகளுக்கு காலை உணவை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும் போது :-
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு விழியிழந்தோர் பள்ளிக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தலைவர் அவர்கள் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயக்கம் தொடங்கினார். சந்தர்ப்ப சூழ்நிலையில் கைவிடப்பட்டது. பொது மக்களுக்கு அவர் நல்லது செய்ய நினைத்ததை யார் செய்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். ரசிகர்களாகிய நாங்கள் பதவியோ, பட்டங்களும் வேண்டாம் எப்போதும் உங்களுடன் ரசிகர்களாகவும் தொண்டனாக இருக்க விரும்புகிறோம். 2026 தேர்தலில் தலைவர் ஆதரவு இல்லாமல் அரசியல் இல்லை என்றார். இந்நிகழ்ச்சியில் ரமேஷ், ஜெகநாதன், யாசின், கார்த்தி, வீரபாண்டி சித்தன், நரேஷ், விக்னேஸ்வரன், முரளி, உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குருமூர்த்தி, சுக்காம்பட்டி பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.