சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் பிரமனூர் ஊராட்சியில் இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்செல்வம் முருகன் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. சபையில் ஊராட்சி செயலர் சந்திரசேகர் 2024 ஆண்டு அறிக்கையை வாசித்தார் அதன் பின்னர் ஊராட்சிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தின் போது அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள்
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுகாதாரப் பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மகளிர் குழுவினர்
மற்றும் கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.