சங்கரன்கோவிலில்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞரின் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சங்கரன்கோவில் லட்சுமிபுரம் 4ம் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். இதில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, நகர துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜலால் வீர மணிகண்டன், வெங்கடேஷ், ஜான், பாரதிராஜா ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.