ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் குழுசார்பில்
யுரேகா ’25 கலைவிழா துணைத்தலைவர் முனைவர் எஸ் சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணண், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்,மாணவர் நல இயக்குநர் முனைவர் ஏ.சாம்சன் நேசராஜ் முன்னிலை வகித்தனர்.
பேராசிரியர் முனைவர் ஜி.கலுசுராமன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் ‘டீசல்’ திரைப்படப் புகழ் அதுல்யாரவி, ‘டிஜே ‘புகழ் சௌமியா, கலந்து கொண்டு கலைவிழா நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர்.
மதுரை தேங்ஸ் பேக்கரி மாற்றுத்திறனாளி பணியாளர்கள் ‘பல குரல்’ நிகழ்ச்சிகளை நடத்தினர்
மாணவி பூஜா கண்களைக் கட்டிக்கொண்டு பரத நாட்டியம் ஆடினார்.
பேராசிரியர் வெங்கடேஷ், மாணவர்கள் ஸ்ரீகார்த்திகேயன்,
ஆகாஷ், சஞ்சனாஜெயின்,
சக்திஸெபஸ்னிகா,
ஆகியோர் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.